அதிர்ச்சியடைய வைக்கும் 10500 படுகொலைகள்..! நாஜி வதைக்கூடங்களின் கொடூரம் - சிக்கிய கொலையாளி
ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் அரசியல் மற்றும் இராணுவ கைதிகளை அடைத்து வைப்பதற்காக பிரத்யேகமாக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த சிறைச்சாலைகள் சித்திரவதை கூடங்களாக செயற்பட்டன.
நாஜி கொன்சன்ட்ரேசன் கேம்ப் என அழைக்கப்பட்ட இந்த சித்திரவதை கூடங்களில் ஆயிரக்கணக்கான கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
இந்த நாஜி வதைக்கூடங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வதைக்கூடங்களில் பணியாற்றி கைதிகளின் கொலைக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
10500 பேர் கொல்லப்பட்ட வழக்கு
அந்தவகையில், இரண்டாம் உலகப் போர் இடம்பெற்ற காலகட்டத்தில், நாஜி வதைக்கூடத்தில் 10500 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 97 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாஜி வதை முகாமில் செயலாளராக பணியாற்றிய இம்கொர்ட் பர்ச்னர் என்ற அந்த மூதாட்டி, 11,412 பேரின் கொலைகளுக்கு உதவியதாக முதலில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இறுதி விசாரணையில் 10500 பேரின் கொலைக்கு காரணமாக இருந்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவருக்கு 2 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கி ஜெர்மனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றங்கள் நடந்தபோது அவரது வயது 18 என்பதால், சிறார் சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
பர்ச்னர் கடந்த 1943 முதல் 1945 வரை ஸ்டட்ஹாப் வதை முகாமில் வேலை செய்துள்ளார். இந்த வதை முகாமில் சுமார் 65,000 பேர் பட்டினி மற்றும் நோயினால் இறந்தனர்.
அவர்களில் போர்க் கைதிகள் மற்றும் நாஜிகளின் அழிப்பு பிரச்சாரத்தில் சிக்கிய யூதர்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
