சுமந்திரனின் கடையடைப்பால் உறுதியான அநுர அரசாங்கத்தின் பலம்

Vavuniya M A Sumanthiran Pillayan NPP Government
By Sathangani Aug 20, 2025 03:59 AM GMT
Report

வடக்கு கிழக்கில் கடையடைப்பை முன்னெடுத்ததன் மூலம் அரசாங்கத்தின் பலமும் அரசாங்கத்திற்கு தமிழ், முஸ்லிம் மக்களிடையில் உள்ள பாரிய ஆதரவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழரசுக்கட்சிக்கு நன்றி கூறுகின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம் (M.K.M ASLAM)  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”வடக்கு, கிழக்கில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தை தமிழ் சமூகம் தோல்வியடைய செய்துள்ளது. யாழில் கடையடைப்பு தோல்வியடைந்ததால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வவுனியாவுக்கு சென்று மூக்கை உடைத்துக்கொண்டு வந்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசு சாணக்கியனுக்கு பதில்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசு சாணக்கியனுக்கு பதில்

போராட்டத்தை முடிவுறுத்திய சிறீதரன்

இலங்கை தமிழரசுக் கட்சியினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் சிறீதரன் எம்.பி முற்பகல் 10 மணியளவிலேயே அந்த போராட்டத்தை முடிவுறுத்தியுள்ளார்.

கடையடைப்பு விடயத்தில் யாழ். மாநகர சபை முதல்வரும் மட்டக்களப்பு மாநாகர சபை முதல்வரும் நடந்து கொண்ட முறை கேவலமானதாக இருந்தது. இவர்கள் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது.

சுமந்திரனின் கடையடைப்பால் உறுதியான அநுர அரசாங்கத்தின் பலம் | Anura Govt Strength Is Confirmed By Sumanthiran

தமது அதிகார பிரதேசங்களில் கடைகளை மூடுமாறு பலவந்தமாக கூறினர். சிலர் அச்சத்தில் கடைகளை மூடிய நிலைமை காணப்பட்டது. அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸ் இதற்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தது. ஏன் இவ்வாறு கூறினர் என்று தெரியவில்லை.

அதேபோன்று மனோகணேசன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் அவ்வாறு ஆதரவளிப்பதாக கூறியிருந்தனர். இந்த கடையடைப்பு புனிதமான நோக்கத்துடன், இலங்கையில் மக்களுக்கு நடந்த பாரிய அநியாயத்திற்கு எதிரானவொன்றாக செய்யப்பட்டது என்று இவர்கள் நினைக்கின்றார்களா?

மக்கள் மிகத் தெளிவாக, புத்தியுடன் செயற்பட்டு தமிழரசுக் கட்சியையும், முஸ்லிம் காங்கிரஸையும் புறக்கணித்துள்ளனர். இந்த கடையடைப்பு என்ன நோக்கத்திற்கானது? தமிழரசுக் கட்சி தமது அரசியல் நோக்கத்திற்காக இந்த போராட்டத்தை திட்டமிட்டது.

நகரும் 113 ஆண்டுகள் பழமையான தேவாலயம் - குவியும் மக்கள்

நகரும் 113 ஆண்டுகள் பழமையான தேவாலயம் - குவியும் மக்கள்

பிள்ளையான் மற்றும் கருணா அம்மானின் செயற்பாடுகள் 

இந்த அரசாங்கம் இனவாதத்தை எதிர்க்கின்றது. இனவாதத்தை தலைதூக்க இடமளிக்க மாட்டோம் என்று அரசாங்கம் உறுதியாக கூறுகின்றது. நாங்கள் மிகத் தூய்மையாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசியல் செய்கின்றோம்.

இதனால் இந்த கடையடைப்பு ஏனைய சமுகத்தினருக்கும். ஏனைய பிரதேசங்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக இருக்கும். தேசிய மக்கள் சக்தி மகிந்த ராஜபக்சவின் கட்சியை போன்றது என்று சுமந்திரன் கூறுகின்றார்.

சுமந்திரனின் கடையடைப்பால் உறுதியான அநுர அரசாங்கத்தின் பலம் | Anura Govt Strength Is Confirmed By Sumanthiran

ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சி அன்று பிள்ளையான் மற்றும் கருணா அம்மான் ஆகியோர் முன்னெடுத்த செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாகவே பார்க்கின்றோம். அவர்களுக்கு தேவையென்றால் கடையடைப்பை செய்யுமாறு கூறுவார்கள்.

கடையடைப்புக்கு செல்ல காரணமான சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஏன் இந்த அரசியல் நாடகம்? இலங்கை தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் என்பன இருப்பை இழந்து வருகின்றன.

ரிஷாத் தலைமையிலான கட்சி இதனை ஆதரிக்கவில்லை. அரசாங்கம் மக்களுடன் இருக்கின்றது. மக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். அரசாங்கத்தின் பலமும் அரசாங்கத்திற்கு தமிழ், முஸ்லிம் மக்களிடையில் இருக்கின்ற பாரிய ஆதரவும் இந்த  மூலம் வெளிப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை ஏற்படுத்திய கடையடைப்பு ஏற்பாடு செய்த தமிழரசுக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றிகளை கூறுகின்றோம் என்றார்.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மாகியம்பதி, சண்டிலிப்பாய், Scarborough, Canada

02 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா, Canada

04 Oct, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்புத்துறை, Scarborough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025