மியான்மரில் 10 காவலர்கள் சுட்டுக் கொலை
shot
myanmar
10 guards
By Kanagasooriyam
மியான்மரில் இனக்குழுக்கள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள் கொல்லப்பட்டனர். மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணிப் படை உள்ளிட்ட இனக்குழுக்கள் ஷான் மாநிலத்தின் நாங்மோன் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 10 காவலர்கள் நிகழ்விடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதேவேளை மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின் ராணுவத்தை எதிர்த்து பல்வேறு இனக்குழுக்கள் ஒன்றிணைந்து வருவதாகவும், தேசிய அளவில் புதிய அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்