20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய சொகுசுப் பேரூந்து!
Sri Lanka Police
Sri Lanka
Accident
By Shalini Balachandran
புத்தளம் அருகே சொகுசுப் பேரூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து புத்தளம் வழியாக அநுராதபுரம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேரூந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேரூந்து புத்தளம் மற்றும் கருவலகஸ்வெவ பிரதேசங்களுக்கு இடைப்பட்ட மீஒய பாலத்தில் இருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
கடும் மழை காரணமாக பாதையில் வழுக்குப்பட்டு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தநிலையில் பேரூந்து மீஒய பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

இதன் போது பேரூந்தினுள் 27 பயணிகள் இருந்த நிலையில் அவர்களில் பத்துப் பேர் காயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக புத்தளம் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி