தனியார் பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பு: மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்
தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான வரம்பு 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இம்முறை கடனைப் பெறுவதற்கான பிணை நிபந்தனைகளும் அதிகரிக்கப்பட உள்ளன.
மாணவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணி
தற்போது தனியார் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ள மாணவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியை உயர்கல்வி அமைச்சு நிறைவு செய்துள்ளது.அந்தத் தகவலின் அடிப்படையில் இம்முறை கடன் வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
தேவைப்பட்டால் கூடுதலான மாணவர்களுக்கு கடனுதவி
இவ்வருடம் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் இன்னும் கூடுதலான மாணவர்களுக்கு கடனுதவி வழங்க முடியும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கடன் திட்டத்தில் இதுவரை ஏழு குழுக்களின் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச கடன் வரம்பு எட்டு இலட்சம் ரூபாய். நான்கு ஆண்டு பட்டப்படிப்புக்கு எட்டு இலட்சம் ரூபாயும், மூன்றாண்டு படிப்புக்கு ஆறு இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த கடன் திட்டத்தில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரத்து ஐநூறு ஆகும் .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |