பாழடைந்த வீடொன்றில் இருந்து 10 இளைஞர்கள் கைது - யாழில் சம்பவம்
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Kiruththikan
யாழ்ப்பாண நகரை அண்மித்துள்ள பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் 10 பேர் கூடி ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை கடந்த புதன்கிழமை (08-02-2023) இரவு யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினரே முன்னெடுத்தனர்.
மறுவாழ்வு முகாம்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை யாழ்.நீதிவான் நீதிமன்றின் கட்டளை பெற்று மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி