யாழ்ப்பாண சிறுமி உட்பட 10 பேர் இரண்டு நாட்களில் மாயம் :தீவிர தேடுதலில் காவல்துறை
Ampara
Batticaloa
Jaffna
Sri Lanka Police Investigation
By Sumithiran
யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த 14 வயது சிறுமி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக 10 பேர் காணாமற் போயுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்த 2 வயதுச் சிறுமியும்,அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும்
அத்துடன் வரக்காபொலையைச் சேர்ந்த 26 வயதான நபரும், மொரட்டுவையைச் சேர்ந்த 57 வயதான பெண்ணும், முல்லேரியாவைச் சேர்ந்த 67 வயதுடைய நபரும், தம்பகல்லையைச் சேர்ந்த ஒருவரும், காரைதீவைச் சேர்ந்த 53 வயதான நபரும், வவுணதீவைச் சேர்ந்த 42 வயதான நபரும், மெதகமவைச் சேர்ந்த 40 வயதான நபரும் இவ்வாறு காணமற் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்படடுள்ளின்றது.
தீவிர தேடுதலில் காவல்துறை
இந்நிலையில் குறித்த நபர்கைளைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்