நெஞ்சை உருக்கும் சிறுவனின் செயல் (காணொளி)
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள சிங்ராலி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், உடல் நலன் குன்றிய தனது தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஒரு தள்ளுவண்டியில் வைத்து 3 கி.மீ தள்ளிக் கொண்டு செல்லும் நெஞ்சை உருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுவன் தள்ளுவண்டியில் வைத்து தந்தையைத் தள்ளிச்செல்வதையும், அவனுடன் தாய் அவ்வண்டியைத் தொடர்வதையும் அவ்வழியே சென்ற ஒருவர் தனது கைபேசியில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
அழைப்பை புறக்கணித்த அம்புலன்ஸ்
அம்புலன்ஸ்க்காக சிறுவன் குடும்பத்தினர் அழைத்ததாகவும் பல மணிநேரம் காத்திருந்த பின்னரும் வரவில்லை என்று சிறுவனின் குடும்பத்தார் குறிப்பிட்டனர்.
இறுதியில் தாங்களாகவே தள்ளுவண்டியில் தந்தையை அழைத்து செல்ல முடிவெடுத்தனர்.
வெளியான காணொளி
शायद मध्य प्रदेश की एंबुलेंस गरीबों के लिए नहीं है,
— Sadaf Afreen صدف (@s_afreen7) February 11, 2023
इसलिए मरीज़ को ठेले पर लिटाकर अस्पताल ले जाया जा रहा है!!
वीडियो मे मरीज़ की पत्नी और बेटे ठेले को धक्का लगाकर ले जा रहे है!#MadhyaPradesh #सिंगरौलीhttps://t.co/7uIlBCDFZq pic.twitter.com/VD6N5nSUow
இந்த காணொளி வெளியானதை அடுத்து சிங்ராலியின் கூடுதல் கலெக்டர் பர்மன் கூறுகையில், "அம்புலன்ஸ்கள் இல்லாத காரணத்தைக் கண்டறிய தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் அறுவை சிகிச்சை நிபுணருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது "என்றார்.

