நுரைச்சோலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சீன பிரஜைகளுக்கு கொவிட்
COVID-19
Lankasri
China
By Sumithiran
இலங்கையில் கொவிட்
இலங்கையில் அண்மைய நாட்களாக கொவிட் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணமுள்ளது.
இந்த நிலையில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய 103 சீன பிரஜைகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
சீன பிரஜைகளுக்கு கொவிட்
அவர்கள் கடந்த 10 நாட்களுக்குள் நாட்டுக்கு வந்தவர்கள் எனத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவர்கள் இதுவரையில், பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி