காவல்துறையினரின் விசேட சுற்றிவளைப்பு: கைப்பற்றப்பட்ட 100 கிலோகிராம் கேரள கஞ்சா
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நடத்திய விசேட சுற்றிவளைப்பில் 100 கிலோகிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பானது, ஜாஎல பிரதேசத்தில் இன்று(17) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜாஎல பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கேரள கஞ்சா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணை
அதேவேளை, இந்த கேரள கஞ்சா கையிருப்பின் சந்தை மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி