பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு அதிபர் ரணிலிடம் கையளிப்பு
பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி அதிபர் மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த வரைவு அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொலைநோக்கு திட்டம்
இந்த தொலைநோக்கு திட்டம், கண்டியை நன்கு திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வளர்ந்த நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், மத்திய மாகாண ஆளுநர் உட்பட கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுடன் ஆரம்பத்தில் கலந்துரையாடப்பட்ட அபிவிருத்தித் திட்டம், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கி மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |