சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உத்தரவாதங்களை வழங்கும் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்
நிதியமைச்சின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உத்தரவாதங்களை வழங்கும் நிறுவனம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
நெருக்கடி நிலை உருவாகியுள்ள இந்த நேரத்தில், நாட்டின் பொருளாதாரத்தில் 50%க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டை அரசு முதன்மையாகக் கருதுகிறது என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் திட்டங்கள்
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 30 பில்லியன் ரூபாவை கடன் திட்டங்களுக்கு பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செயல்பாட்டு மூலதனம் வழங்குதல் உட்பட 11 வெவ்வேறு நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |