இலவசமாக வழங்கப்பட்ட 100 கிலோ பேரீச்சம்பழங்கள்
eravur
donation
pears
By Sumithiran
புனித றமழான் நோன்பை முன்னிட்டு ஏறாவூர் நகரில் தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிக் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோகிராம் விகிதம் 100 கிலோ கிராம் பேரீச்சம் பழங்கள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கே. அப்துல் வாஜித் தெரிவித்தார்.
அக்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 17.04.2022 ஏறாவூரில் அதன் முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இவ்வாறான உதவிகளை ஏனைய வறிய குடும்பத்தவர்களுக்கும் தொடர்ந்து வழங்க எதிர்பார்த்திருப்பதாக ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் வாஜித் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி