ஒருவாரத்துக்கு முன் உலக சாதனை படைத்த மூதாட்டி உயிரிழந்தார்
United States of America
Guinness World Records
By Jaso
கடந்த ஒருவாரத்துக்கு முன்பாக அமெரிக்காவின் இல்லினாய்சில் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த 104 வயது மூதாட்டி டோரதி ஹாப்னர் காலமானார்.
டோரத்தி, ப்ரூக்டேல் லேக் வியூ அவரது படுக்கையிலே இறந்து கிடந்தார் என்று அவரது நண்பர் ஜோ கானன்ட் கூறினார். அவர் ஞாயிற்றுக்கிழம இரவே இறந்து இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
பயம் இல்லாதவர்கள்
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங்கில் ஈடுபட்ட பின்னர் பயம் இல்லாதவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடலாம் என்று டோரதி கூறினார்.

உலக சாதனை நிகழ்த்திய ஹாப்னருக்கு இன்னும் சாதனைக்கான சான்றுகள் வழங்கப்படவில்லை. ஆனால் அவர் அதற்கு முன்பாகவே மரணமடைந்து விட்டார். அவரது மரண செய்தியை உள்ளூர் ஊடகங்களும்,டைவிங் சங்கங்களும் உறுதி செய்துள்ளன.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்