நடுக்கடலில் கவிழ்ந்த படகு - 11 பேர் பலி ; பலர் மாயம்...!
Indonesia
Accident
Death
By Pakirathan
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகாமைத்துவக் குழு தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 78 பேர் வரையில் ஏற்றிச் சென்ற விரைவுப் படகே நீரில் மூழ்கியுள்ளது.
குறித்த விபத்தில் காணாமல் போன ஒன்பது பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
விபத்து
படகு புறப்பட்டு 30 நிமிடங்களின் பின்னர் மரத்தில் மோதியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடங்குகின்றனர்.
அடிக்கடி படகு விபத்து நடைபெறும் இந்தோனேசியாவில், 2018 ஆம் ஆண்டில், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஆழமான ஏரியில் சுமார் 200 பேருடன் பயணித்த படகு மூழ்கியதில் 167 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி