11 மாணவிகள் வன்புணர்வு :கைதான ஆங்கில ஆசிரியருக்கு நீதவான் கொடுத்த உத்தரவு
தரம் 5 இல் கல்வி பயிலும் 11 மாணவிகள் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஆங்கில ஆசிரியரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
11 மாணவிகள் வன்புணர்வு
குருநாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 05 இல் கல்வி பயிலும் மாணவிகள் 11 பேரை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான ஆங்கில ஆசிரியருக்கு எதிராக பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு அளித்தனர்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த ஆசிரியரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றில் முற்படுத்தினர்.
ஆளுநர் எடுத்த முடிவு
இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் இன்று(14) வியாழக்கிழமை ஆசிரியரை பிணையில் விடுதலை செய்தார்.

இதேவேளை குறித்த ஆசிரியரின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.