அதிவேகமாக வந்த கார் மோதி 11 வயது சிறுவன் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Thulsi
கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று (08.01.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
மேற்படி சிறுவன் சைக்கிளில் வீதியைக் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியுள்ளது.
விசாரணை
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உடனே கல்கமுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர் அங்கு வருவதற்கு முன்னர் உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர், காரின் சாரதியான 27 வயது இளைஞரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 1 நாள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி