செவ்வந்திக்கு உதவிய நபரிடமிருந்து 12 தோட்டாக்கள் மீட்பு!
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகுகளை வழங்கிய நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் 12 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
மன்னார், வெல்லம் குளத்தில் உள்ள ஒரு பண்ணையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதேவேளை, இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் இதுவரையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு
குறித்த 13 சந்தேகநபர்களுள் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்ட இரண்டு மைக்ரோ வகை துப்பாக்கிகள் இதற்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவற்றுக்கான 12 தோட்டாக்கள் இவ்வாறு இன்று (06.11.2025) கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |