முதியோர்கள் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
Dr Ramesh Pathirana
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Sathangani
இலங்கையில் உள்ள12 வீதமான முதியோர்கள் தமது அனைத்து பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எனவே பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாய்ப் புற்றுநோய்
இதேவேளை வாழ்நாள் முழுவதும் வாய், பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியமானது என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டில் இன்று ஏராளமானோர் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி