ஈஸ்டர் தாக்குதல் 12 சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
உயிர்த் ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குலை நடத்திய பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்போது, 10 பெண்கள் மற்றும் 2 ஆண் சந்தேக நபர்கள் உட்பட 12 சந்தேக நபர்களை விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகள் நிறைவு
பயங்கரவாத தடுப்பு பிரிவு, டிசம்பர் 11, 2020 அன்று நீதிமன்றத்தில் உண்மைகளைப் சமர்பித்த பின்னர், சிந்தி சட்டுனா, ரவூஃப் பாத்திமா சாரா, லெப்பே ரிஷானா, சாலிகு ஜுனை தீஸ்யா, காசிம் மதனியா, பாத்திமா ஷாஹிதா, இம்ராஹிம் சர்தா மற்றும் சந்தேக நபர்களான முகமது இர்பான் மற்றும் முகமது ஷஃபான் ஆகியோரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, பிணை வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் மீதான விசாரணைகளை முடித்துவிட்டதாகவும், வழக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பியதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதனைதொடர்ந்து, ஏப்ரல் 9 ஆம் திகதி சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின்படி வழக்கின் நடவடிக்கைகளை நிறைவு செய்வதாக அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
அத்துடன், சந்தேக நபர்களின் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் வழக்கை சமர்ப்பித்து, பறிமுதல் செய்யப்பட்ட தொலைபேசிகள் மற்றும் பிற வழக்குப் பொருட்களை சந்தேக நபர்களிடமிருந்து திருப்பித் தர உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஆறு தொலைபேசிகளை திருப்பித் தர நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினரின் உண்மைகளையும் பரிசீலித்த பின்னர், மேலதிக நீதவான் சந்தேக நபர்களை விடுவித்து, சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஒப்படைக்கமாறும் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
