வடக்கு, கிழக்கு தமிழ் வாக்குகளை அபகரிக்க ரணில் நடத்தும் நாடகம் அதிகாரப் பகிர்வு!
"வருகின்ற அதிபர் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் வாக்குகளை சேகரிக்க ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சியே அதிகாரப்பகிர்வு எனும் நாடகமாகும்."
இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதிகாரப்பகிர்வு விடயத்தில் அவசரம்

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
"ரணில் விக்ரமசிங்க அடுத்து வரப்போகின்ற அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதுடன், இதற்காக தமிழர் பகுதி வாக்குகளை சேகரிப்பதற்கான முயற்சியே இந்த அதிகாரப்பகிர்வு விடயம்.
அவர் மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலேயே பல விடயங்களை செயல்படுத்த முற்படுகின்றார்.
பணத்தை காரணம் காட்டி தேர்தலை பிற்போடத் தீர்மானித்துள்ள இலங்கை அரசு, ஏன் அதிகாரப்பகிர்வு விடயத்தில் மட்டும் அவசரம் காட்ட வேண்டும்.
எனவே, அதிகாரப்பகிர்வு விடயத்தில் அவசரம் காட்டுவதை இலங்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.