மத்திய மாகாணத்தில் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் : வெளியான தகவல்
மத்திய மாகாணத்தில் உள்ள 13 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மண்சரிவு அபாயம் மற்றும் பாதிக்கப்பட்ட வீதிகளால் ஏற்படும் சிரமங்கள் காரணமாக குறித்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மெதகம தேசிய பாடசாலை, அல் - அக்ஷா முஸ்லிம் வித்தியாலயம், யதிராவண ஆரம்ப பாடசாலை, பல்லே தெல்தோட்ட ஆரம்பக் கல்லூரி, பேரவில ஆரம்ப பாடசாலை, மீமுரே ஆரம்ப பாடசாலை, மீமுரே கைகாவாலா கல்லூரி, கும்புக்கொல்ல ஆரம்ப பாடசாலை, லம்லியூர் தமிழ் கல்லூரி, ஜேம்ஸ் பீரிஸ் ஆரம்ப பாடசாலை, உடவத்த ஆரம்ப பாடசாலை, ஹங்குரான்கெத சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் கல்லூரி மற்றும் மெட்டிம்பேய கல்லூரி ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
அனர்த்தத்தால் சேதமடைந்த பாடசாலைகள்
அத்துடன் சப்ரகமுவ மாகாணத்தில், அனர்த்தத்தால் சேதமடைந்த இரண்டு பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் பேரிடரால் சேதமடைந்த அனைத்து பாசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணை இன்று (05) ஆரம்பமான நிலையில் தரம் ஒன்றுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 29 ஆம் திகதியும் தரம் ஆறுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |