இலங்கையில் நான்கு இலட்சத்தை தொட்ட தங்க விலை
இலங்கையில் இன்று (23) தங்கத்தின் விலை 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
5,107 டொலர்களாக உயர்வு
இதேவேளை சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் காரணமாக இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,107 டொலர்களாக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த வார இறுதியைக் காட்டிலும் இன்று 44 டொலர்கள் அதிகரித்துள்ள நிலையில் இது 0.95 சதவீத உயர்வாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில் 2 டொலர்களால் அதிகரித்து, தற்போது ஒரு அவுன்ஸ் வெள்ளி 85 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையின் இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்பவே, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |