தமிழர் பகுதியில் சிறுமியை தாக்கிய சிறிய தாய் அதிரடி கைது!
Sri Lanka Police
Batticaloa
Eastern Province
By Aadhithya
9 months ago
மட்டக்களப்பு (Batticaloa) – வாழைச்சேனை மஜீமா நகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியைத் தாக்கிய குற்றத்தில் அவரது சிறிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியைத் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தநிலையில் குறித்த பெண் கால்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தவகையில், கைதானவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
பணிப் பெண்
இந்தநிலையில், தாக்குதலுக்குள்ளான சிறுமியின் தாய், அவரது தந்தையை பிரிந்து பணிப் பெண்ணாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, அந்த சிறுமியின் தந்தை மறுமணம் செய்து கொண்ட நிலையில் சிறுமியின் சிறிய தாய் அவரை தாக்கியுள்ளார்.
மேலும், குறித்த சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி