ஒரு மாதத்தில் ஒருவருக்கு தேவையான பணம் - அரசாங்கத்தின் அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Money
By Sumithiran
ஒருவர் ஒருமாதத்தில் வாழ
இலங்கையில் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து ஒருமாதத்தில் வாழ்வதற்கு குறைந்தபட்ச தொகையாக 13,137 ரூபா அடையாளம் காணப்பட்டுள்ளது.
மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
முந்தைய மாதத்தில் இதே எண்ணிக்கை 12,444 ரூபாவாகக் காட்டப்பட்டது, இம்முறை வளர்ச்சி 5.57% ஆக உயர்ந்துள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்யத் தேவையான தொகை 52,552 ரூபா எனவும் கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 56,676 ரூபா எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேலிக்கூத்தான அறிவிப்பு
இதேவேளை நாளாந்தம் அதிகரிக்கும் விலைகளால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெறும் கேலிக்கூத்தானது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி