யாழில் கடற்படையின் சோதனையில் சிக்கிய பொருள்: சூத்திரதாரிகள் தப்பியோட்டம்
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Laksi
யாழ்ப்பாணத்தில் (Jaffna) 135 kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சா வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் இன்று (13) அதிகாலை 4:45 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தல் இடம் பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக வெற்றிலைக்கேணி கடற்படை, மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தாளையடி பகுதியில் தேடுதல் நடாத்தியுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கை
இதன்போது, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு காணப்பட்ட 135 கிலோ எடையுள்ள 03 கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றிய அதிரடிப்படையினர் குறித்த கஞ்சா பொதிகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்