கிளிநொச்சியில் மாணவர்கள் மீது குளவிக் கொட்டு: பலர் வைத்தியசாலையில் அனுமதி
Kilinochchi
Climate Change
Sri Lankan Schools
By Laksi
10 months ago
பாடசாலை ஒன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது கிளிநொச்சி (Kilinochchi) தர்மபுரம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
அதிக காற்று வீசி வரும் நிலையில் குளவிக்கூடு கலைந்துள்ள காரணத்தினால் மாணவர்களை குழவிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவொன்று நேற்று (12) குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




