நிரந்தர அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள தன்னார்வ வழிகாட்டிகள்
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றும் 136 தன்னார்வ வழிகாட்டிகள் தொடர்பில் சுற்றாடல் அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த 136 பேரையும் திணைக்களத்தின் கள உதவியாளர் பதவிக்கு நிரந்தர அடிப்படையில் இணைத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில் பாதுகாப்புப் பிரச்சினை
சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல வருடங்களாகத் தீர்க்கப்படாமலிருந்த தன்னார்வ வழிகாட்டிகளின் தொழில் பாதுகாப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தற்போதைய சுற்றாடல் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் துரித ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |