கல்வி அமைச்சிலிருந்து மாயமான நுற்றுக்கணக்கான வாகனங்கள்
கல்வி அமைச்சின் (Ministry of Education) செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
2025 மே மாதத்தில் வெளியிடப்பட்ட 2024 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் சில கண்டறிதல்களை அடிப்படையாக வைத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் கல்வி அமைச்சு, கல்வி சீர்திருத்தங்களுக்காக 5,219 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவனம்
அத்துடன் தேசிய கல்வி நிறுவனம் 350 மில்லியன் ரூபா செலவிட்டதையும் அறிக்கை குறிப்பிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்தச் சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படவில்லை என்றும், சீர்திருத்தங்களுக்கான தெளிவான வரைபடம், 2015 மார்ச் 26 வரை கூட தயாரிக்கப்படவில்லை என்றும், அறிக்கை எடுத்துக்காட்டுகின்றது என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்
