13ஆம் சீர்திருத்தச் சட்ட விவகாரம் - ரணிலின் கண்துடைப்பு நாடகமாம்
13ஆம் சீர்திருத்தச் சட்டம் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு போன்ற திடீர் கரிசனைகள், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் போலிக் கண்துடைப்பு நாடகமும், திசை திருப்பலுமே தவிர வேறொன்றும் இல்லை என கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருன் ஹேமசந்திரா தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், தாம் பிரதமராக இருந்த காலப்பகுதியில் அரசியலமைப்பு சபையினை 80இற்கும் அதிகமான தடவைகள் கூட்டியபோதிலும், அதில் எந்த முன்மொழிவும் மேற்கொள்ளாத கட்சி அவரது ஐக்கிய தேசியக் கட்சியியே.
இது இவ்வாறிருக்க தற்போது மாத்திரம் இது தொடர்பில் கருத்து வெளியிடுவது முற்றிலும் நம்பகத்தன்மை அற்றது.
அதள பாதாளத்தில் நாடு

இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட கடன் உதவித்திட்டங்களின் மூலமாக நமது நாடானது மீண்டும் அதள பாதாளத்தில் விழுந்துள்ளது.
இது இந்தியாவின் மாய வலைகளில் இருந்து விடுபட நாம் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தினை மையப்படுத்திய வளங்களை இந்தியாவிற்கு தாரை வார்க்கும் செயற்திட்டத்திற்காகவே அதிபர் அண்மையில் இந்தியாவிற்குச் சென்று வருகை தந்திருக்கிறார் எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.