புத்தி சுயாதீனமற்றவராக செயற்படும் மகிந்த - கட்சிக்குள்ளிருந்தே எழும் கடுமையான விமர்சனம்!
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு புத்தி சுயாதீனம் இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்.
13ஆவது திருத்தத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க, நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மகிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்துத் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் ஆணையற்ற அதிபருக்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் உரிமை கிடையாது என்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
ரணிலுக்கு உரிமை கிடையாது
இது தொடர்பில் தொடாந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதிபரின் யோசனைக்கு, புத்தி சுயாதீனத்துடன் மகிந்த ராஜபக்ச இருந்திருந்தால் இணக்கம் தெரிவித்திருக்க மாட்டார்.
மேலும் அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டே அதிபர் ரணில் விக்ரமசிங்க 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளாரே தவிர, தமிழ் மக்கள் மீது கொண்ட இரக்கத்தினால் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
உணவின்றித் தவிக்கும் மக்கள்
உண்பதற்கு உணவின்றி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்ற அச்சத்தில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ரணில் கூறும் அனைத்திற்கும் தலையசைத்துக் கொண்டிருக்கின்றார்” எனவும் பகிரங்கமாக சாடியுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)