உங்கள் முகவர்களூடாக தேர்தலில் நின்று வெற்றிபெற்றுக் காட்டுங்கள் பார்ப்போம்- அண்ணாமலைக்கு பகிரங்க சவால்!
ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்கும் வகையில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கருத்துக்களை வெளியிடக் கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
எனவே 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு வெளியிடுவதாக யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
மேலும் தமிழர்கள் மீது திணிக்கும், 13ஆம் திருத்தம் தான் தமிழர்களின் தீர்வு என எண்ணும், இந்தியாவின் பொம்மைகள், எடுபிடிகள் அல்லது கைக்கூலிகள் இங்கே தேர்தலில் நின்று வாக்குகளைப்பெற முடியாத நிலைதான் காணப்படுகின்றது.
அண்ணாமலையின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை தூக்கத்திலிருந்து எழுந்து வந்து தமிழர்களுக்கு 13ஆவது தான் தீர்வு எனக் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
