இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது : தொடரும் அத்துமீறல்கள்
இலங்கை (Srilanka) கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் 14 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்கள் இன்று (5) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு இந்திய இழுவைப் படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள்
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (4) காலை மீன் பிடிக்க சென்ற கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களும், இழுவைப் படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
