யாழில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
Sri Lanka Police
Jaffna
Drugs
By Sathangani
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டை ஒன்றை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
16 பொதிகளில் அடைக்கப்பட்டு
குறித்த சாக்கு மூட்டையை சோதனை செய்த கடற்படையினர், 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர்.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் நேற்றைய தினம் (23) பெருந்தொகையான பீடி இலைகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டுள்ளனர்.
தமிழ்மக்களின் களமாக விளங்கும் அதிபர் தேர்தல்: தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்து
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி