யாழில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
Jaffna
Sri Lanka
Jaffna Teaching Hospital
By Laksi
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று(5) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சாவகச்சேரி - இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(05) காலை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி பிற்பகல் உயிரிழந்துள்ளது.
மேலும், குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்