அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்
பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆசிரிய உதவியாளர்கள், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் பட்டப்படிப்பை அல்லது ஆசிரிய கலாசாலை கற்கையை பூர்த்தி செய்ததும் நிரந்தர நியமனத்துக்கு உள்வாங்கப்படுவார்கள்.
நிரந்தர நியமனம்
இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு 20,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
மத்திய மாகாணத்தில் நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாதுள்ள 125 ஆசிரிய உதவியாளர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் அந்த நியமனம் வழங்கப்படும் .இதற்கமைய, 2,531 பேருக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |