வெளிநாடொன்றில் கைப்பற்றப்பட்ட 14 தொன் போதைப்பொருள்
கொலம்பியாவிலுள்ள பியூனாவென்டுரா துறைமுக பகுதியில் 14 தொன் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் அந்நாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது அந்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் தொகை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
¡ALERTA!
— Gustavo Petro (@petrogustavo) November 21, 2025
La incautación más grande de la Policía de Colombia en la última década.
Son 14 toneladas de cocaína incautadas sin un solo muerto en el Puerto de Buenaventura. pic.twitter.com/KlCPPfRbWa
கொக்கெய்ன் போதைப்பொருள்
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் ஒரு பிளாஸ்டர் பொதியோன்றில் மறைக்கப்பட்டு நெதர்லாந்து நோக்கி பணித்த கப்பலில் அனுப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம், அமெரிக்கா மற்றும் கொலம்பியாவின் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இவ்வாறு மிக பாரியளவிளான கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |