14 வயதில் புர்ஜ் கலிஃபாவில் சொந்த AI நிறுவனம்: சாதனை படைத்த சிறுவன்
துபாயை சேர்ந்த 14 வயதான ஜெயினம் என்ற சிறுவன் உலகின் உயரமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி சாதனை படைத்துள்ளார்.
'மெங்கோ என்ஜின்' என்ற இவரின் AI நிறுவனம் வணிக நிறுவனங்களின் மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் தொடர்பு, உள்ளடக்க உருவாக்கம் போன்ற பணிகளைத் தானியங்கி முறையில் செய்ய உதவுகிறது.
உலகின் மிக உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலிஃபாவின் 141-வது மாடியில் இவரது நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது.
14 வயது சிறுவனின் சாதனை
இதன் காரணமாக துபாயின் மிக இளைய AI நிறுவனர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.

இந்த சிறுவனுக்கு 6-வது வயதில் தந்தை அழைத்துச் சென்ற ஒரு வர்தக குழு கூட்டம் மூலம் , தொழில்முனைவோர் ஆக வேண்டுமென்ற ஆர்வம் அவருக்குள் வந்ததாக அவர் கூறி இருக்கிறார்.
தனது சொந்த முயற்சியின் மூலம் எந்ந வகுப்பிற்கும் செல்லாமல் Generative AI தொழில்நுட்பத்தைக் தானாக கற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் பொது தளத்தில் கிடைக்கும் காணொளி மற்றும் சொந்தமாகப் புதிய திட்டங்களை உருவாக்கியும் இணையத்தில் கற்றுக்கொண்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 1 மணி நேரம் முன்