விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி - புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்
பயிர் இழப்புகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி பயிர் செய்கையை உள்ளடக்கிய ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை இந்த புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆரம்பக் காப்பீட்டுத் தொகையில் 7% கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் விவசாயிகள் இக்காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறலாம் என்று சபை தெரிவித்துள்ளது.
பூச்சிகளால் ஏற்படும் சேதங்கள்
இத்திட்டமானது, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கிரிஅல, பீட்ரூட்,முட்டைகோஸ், கரட், லீக்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், பயறு/பீன்ஸ், மிளகாய் (கேப்சிகம்), தக்காளி, பாகற்காய், பூசணி உள்ளிட்ட விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட பயிர்களை உள்ளடக்கும் எனச் சபை தெரிவித்துள்ளது.

இயற்கைப் பேரழிவுகள், கட்டுப்படுத்த முடியாத தாவர நோய்கள், பூச்சிகளால் ஏற்படும் சேதங்கள் மற்றும் காட்டு யானைகளின் தாக்குதல்களால் ஏற்படும் இழப்புகளுக்கு இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்