கிழக்குப் பல்கலையில் 15 மாணவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினாரால் கைது
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (Eastern University, Sri Lanka) 15 மாணவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (04) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் ஆறு மாணவிகளும் மற்றும் ஒன்பது ஆண் மாணவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆண் மாணவர்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தொழில்நுட்ப பீடத்தின் 2021/2022 கல்வியாண்டில் பயிலும் மாணவிகள் குழுவை வாய்மொழியாகப் பேசி அச்சுறுத்தியதற்காக இந்த 15 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பெண் மாணவர்கள் பண்டாரவளை, அதுருகிரிய, அட்டம்பிட்டிய, கோட்டே, கலமுன மற்றும் லுனுகம்வெஹெர ஆகிய பகுதிகளில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண் மாணவர்கள் அலஹெனேகம, கந்தளாய், கம்பளை, வதுருகம, அகுருவதொட்ட, மீவனபலான, பன்னிபிட்டிய, ஹுகஸ்தலாவ மற்றும் பண்டாரகம ஆகிய பகுதிகளில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
