15 வயது பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம்..! தந்தை கைது
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
Child Abuse
By Kiruththikan
துஷ்பிரயோகம்
காத்தான்குடியில் 15 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 44 வயதுடைய சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று வீட்டில் வைத்து அவரது தந்தை துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட சிறுமி 1921 சிறுவர் பிரிவுக்கு முறைப்பாடு
இந் நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி 1921 சிறுவர் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர் நேற்று சனிக்கிழமை (03-09-2022) தந்தையை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை காவல்துறையினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

