கொழும்பு பாதுகாப்புக்கு இந்தியா 150 மில்லியன் டொலர் பொதி
Colombo
Sri Lanka
By Vanan
பூகோள அரசியல் களத்தில் ஒரு போட்டிக் களமாக மாறியுள்ள இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய அதிர்வுகள் கிளம்பி வருகின்றன.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்குரிய விஜயமாக நாளை(2) கொழும்புக்கு வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கிறார்.
இதன்போது சிறிலங்காவின் படைத் தரப்புக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கடன் பொதியை இந்திய தரப்பில் வழங்கக் காத்திருக்கிறார்.
இலங்கையின் பொருளாதர நெருக்கடிகளின் பின்னணியில் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் கடனுதவிகள் மற்றும் மானியங்களின் வரிசையில் இந்த 150 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இணையக் காத்திருக்கிறது.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,