கட்டுநாயக்க விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் கழிவறைகள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் கழிவறை அமைப்பு நிறுவப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அதிநவீன ஸ்கேனர் இயந்திரங்களை(Scanner machines) ஜப்பான் அரசாங்கம் வழங்கி வைத்தது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகியினால்(Mizukoshi Hideaki) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்காக முதலாவது உபகரணத் தொகுதி துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.
அபிவிருத்தி முன்னேற்றம்
இதனைத் தொடர்ந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் கழிவறை அமைப்பு நிறுவப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பிரவேசிக்கும் பிரதான இடமாகக் காணப்படும் கட்டுநாயக்க சர்வதேச விமானத்தின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உயர் தொழில்நுட்ப உபகரணங்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக ஜப்பான் அரசாங்கம் தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் என்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |