மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு
By Raghav
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 7,500 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
