உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் முறைப்பாடுகள்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (Local Government Election 2025) தொடர்பாக இதுவரை குற்றவியல் முறைப்பாடு மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 154 முறைப்பாடுகள் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதன்படி, நேற்று (13) 5 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மார்ச் 3 ஆம் திகதி முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.
பலர் கைது
இந்த சம்பவங்கள் தொடர்பாக 14 வேட்பாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் 46 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 11 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளதுடன் குறித்த நாட்களில் வாக்களிக்க முடியாத அரச பணியாளர்களுக்காக ஏப்ரல் 28 மற்றும் 29 மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
