நீரில் மூழ்கி மாணவன் பரிதாபமாக பலி
கால்வாய் ஒன்றில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
குறித்த துயர சம்பவம் கந்தளாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் இடம்பெற்றுள்ளது
இவ்வாறு உயிரிழந்தவர் பேராதுவெலிய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து அந்த இடத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

விபத்தையடுத்து பிரதேசவாசிகளும் இளைஞர்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், அவர் நீராடச் சென்ற இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த மாணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கந்தளாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்