வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள தொழிற்சங்கங்களுக்கு அமைச்சரின் பணிவான அழைப்பு
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன, அனைத்துப் அரச பணியாளர்களும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் இன்று பணிக்கு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
மேலும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரச்சனைகளை தீர்க்க அரசாங்கத்தின் அணுகுமுறை
பொதுச் சேவையின் பல்வேறு துறைகளில் பிரச்சினைகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அபயரத்ன, அவற்றைத் தீர்க்க அரசாங்கம் ஏற்கனவே ஒரு அணுகுமுறையை எடுத்துள்ளதாகக் கூறினார்.

இன்று வேலைநிறுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிற்சங்கங்கள் பங்கேற்றாலும், நாட்டின் நலன் கருதி பெரும்பாலான தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் சேராது என்றும், இது தொடர்பாக அந்தத் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை
தொழிற்சங்கப் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பொதுச் சேவையின் பிரச்சினைகளுக்கு பட்ஜெட்டில் ஓரளவிற்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பொது நிர்வாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |