விவசாயிகளுக்கு சென்றடைந்த பெருந்தொகை பணம்: வெளியாகியுள்ள தகவல்
Aadhaar Inclusive Development For Agriculture and Rural Infrastructure Development Aid Arid
Sri Lankan Peoples
Ministry of Agriculture
By Dilakshan
பயிர் சேதத்திற்கு இழப்பீடாக 1640 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இலவச பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நெல், சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயா பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 95,128 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட 79,602 விவசாயிகளுக்கு விவசாய காப்பீட்டு இழப்பீடாக இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பயிர் சேதத்திற்கான இழப்பீடு
வெள்ளம், கனமழை, வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் சேதமடைந்த பயிர்களுக்கும், நோய்கள், பூச்சிகள் மற்றும் காட்டு யானை சேதம் போன்றவற்றால் சேதமடைந்த பயிர்களுக்கும் காப்புறுதி தொகை வழங்கப்படுகிறது.
அத்துடன், விவசாயிகளிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்காமல் பயிர் சேதத்திற்கான இழப்பீட்டை அரசாங்கமே ஏற்கின்றனமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

4ம் ஆண்டு நினைவஞ்சலி