இலங்கையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்களால் பலியான ஆயிரக்கணக்கானோர்!
2026ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 1,605 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த விபத்துக்களில் 1,693 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்தார்.
அந்தவகையில் உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகளும், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், மோட்டார் சைக்கிளில் 119 பின்னால் அமர்ந்து பயணித்தோரும், 115 துவிச்சக்கரவண்டி ஓட்டுநர்களும், 136 சாரதிகளும் மற்றும் 162 பயணிகளும் அடங்குவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீதி விபத்துக்களின் எண்ணிக்கை
மேலும், இதுவரையில் 3,125 பாரிய விபத்துக்களும், 6,477 சிறு விபத்துக்களும் மற்றும் 2,388 சேதமடைந்த விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |