17 புதிய இராஜதந்திரிகளின் நற்சான்றுப் பத்திரங்கள் கோட்டாபயவிடம் கையளிப்பு (படங்கள்)
gotabaya
hand over
new diplomat
By Vanan
புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும், 06 உயர்ஸ்தானிகர்களும் அmரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்துள்ளனர்.
அரச தலைவரது மாளிகையில் கடந்த 21ஆம் திகதி குறித்த நற்சான்றுப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
எகிப்து, இந்தோனேசியா, ஜோர்தான், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, ஹங்கேரி, மொரிடானியா, துனிசியா, ஆர்ஜென்டினா, டொமினிக் குடியரசு, ஸ்பெயின் மற்றும் ஸ்லாவேனியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் சியெரா லியோன், ருவாண்டா, பொட்ஸ்வானா, மோல்டா, கயானா குடியரசு மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் புதிய உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிய நியமனங்களைப் பெற்றுள்ளனர்.




மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி